Thursday, September 29, 2005

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

பாடல்: உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா

கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா

6 comments:

துளசி கோபால் said...

கணேசா,

இது இல்லை.
அது வேற பாட்டு.


'தணியாத தமிழ் மோகம் கொண்டவா,
திருத்தணிகை உந்தன் படைவீடு அல்லவா'ன்னு வரும்.

அன்பு said...

அருமையான பாடல்கள். எத்தனையோ முறை இந்தப் பாடல்களை கேட்டிருந்தாலும், வரிகளை உள்வாங்கி இப்போது வாய்விட்டுப் பாட - பேரானந்தம் கிடைக்கிறது.
நன்றி கணேஷ்... தொடரட்டும் உமது சேவை.

G.Ragavan said...

முருகா என்றதும் உருகாதா மனம்! அந்த முருகனையே உருக வைக்கும் பாடல் வரிகளைத் தந்தமைக்கு நன்றி கணேஷ். சௌந்தரராஜனின் முருகன் பாடல்கள் அனைத்தும் சிறப்போ சிறப்பு.

NambikkaiRAMA said...

டி.எம்.எஸ் குரலில் பக்தி பாடல் என்றால் அந்த இனிமைக்கு குறைவேது

குமரன் (Kumaran) said...

எனைக்காக்க உனையன்றி யாருமில்லை - தங்க வரிகள்.

Kannappan said...

mihuntha mahilchiyaiyum panivaiyum tharum nallathoru paadal. mikka nandri.