Tuesday, November 08, 2005

காக்கும் கடவுள் கணேசனை நினை

பாடல்: காக்கும் கடவுள் கணேசனை நினை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே

காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

காக்கும் கடவுள் கணேசனை நினை

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்

காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

6 comments:

ஏஜண்ட் NJ said...

கணேஸா!

ம்...

நச்சத்திரமா மின்னுறீங்க!!

இப்போ...

பாட்டுபோட்டு பின்னுறீங்க!!!

குமரன் (Kumaran) said...

அந்த தொந்தியப்பன் கணேசனை நினைக்கச் சொல்றீங்களா இல்லை கோவில்பட்டி (டெல்லி) கணேசனை நினைக்கச் சொல்றீங்களா? :-)

Ganesh Gopalasubramanian said...

//மின்னுறீங்க!! பின்னுறீங்க!!!//
ஞான்ஸ் ! இது தாங்க எனக்கு வரவே மாட்டேங்குது. தனியா உங்ககிட்ட பயிற்சி எடுக்கணும்.

//அந்த தொந்தியப்பன் கணேசனை நினைக்கச் சொல்றீங்களா இல்லை கோவில்பட்டி (டெல்லி) கணேசனை நினைக்கச் சொல்றீங்களா? :-)//
குமரன் ! இந்த டெல்லி கணேசனும் தொந்தி கணேசன் தான். எதுக்கு வம்பு ரெண்டு பேரையும் சேர்த்தே நினைச்சுக்கோங்க.

G.Ragavan said...

நல்ல பாட்டு கணேஷ். அதுலயும் கணே சனை நினை -ன்னு சீர்காழி பாடுவது சூப்பர்.

உங்களையும் நெனச்சிக்கிருவோம். சரிதான.

ஜோ/Joe said...

ஆனை முகனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்பவனே
மோனைப் பொருளே மூத்தவனே கணேசா! -

நம்ம செவாலியே கணேசன் கூட பாடியிருக்கார்.ஹி..ஹி

Divine Musical Vibes... said...

nandraai irundhadhu nalvaazhthukkal