Tuesday, November 08, 2005

உன்னையும் மறப்பதுண்டோ

பாடல்: உன்னையும் மறப்பதுண்டோ
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்

உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?

கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா
எண்ணத்தின் ஒளிச்சுடரே
எண்ணத்தின் ஒளிச்சுடரே
உன்னை எப்படி நான் மறப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?

பொன் பொருள் மறந்திருப்பேன்
இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா
என்னுயிர் ஆன உன்னை
என்னுயிர் ஆன உன்னை
மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?

நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன்
வடிவேல் ஏந்திய உனை மறந்தால்
நான் ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன்?
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?

6 comments:

குமரன் (Kumaran) said...

நீங்கள் இப்படிப் சீர்காழி, TMS பாடல்கள் போட்டு அவற்றை மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டுகிறீர்கள்....

தாணு said...

வார்த்தைகளெல்லாம் எப்பிடி நினைவு வைச்சுக்கிறீங்க?

Ganesh Gopalasubramanian said...

//அவற்றை மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டுகிறீர்கள்....//
நன்றி குமரன். பாடல்களுக்கான சுட்டியைக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

@தாணு
தம்பிக்காக முன்னமே சில பாடல் வரிகளை எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்பொழுது பதிவாக இடுகிறேன் அவ்வளவு தான்.

G.Ragavan said...

இந்தப் பாட்டுகளைக் படிக்குறப்போ. அவங்க காதுகிட்ட வந்து மெதுவா பாடுற மாதிரி இருக்கு. அதுலயும் பாவத்தோடும் பக்தியோடும் டி.எம்.எஸ் பாடும் போது சொல்லனுமா.......

தாணு said...

கணேஷ்
ரொம்ப நாளா காணலையே? நாந்தான் கவனிக்கலையா இல்லை இப்போதான் ஆரம்பிக்கிறீங்களா?

சிவமுருகன் said...

அனைத்து பாடல்களையும் ஒரிடத்தில் தந்த விதம் வித்யாசமாக இருந்தது. தொடர்க.