Monday, June 16, 2008

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

பாடல்: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
தொகுப்பு: பாரதி (திரைப்படம்)


பாரதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே சிறப்புக் கவனத்துடன் இசையமைக்கப்பட்ட பாடல்களென கூறலாம். எனக்கு திரு. ஜேசுதாஸ் அவர்களின் குரம் மிகவும் பிடிக்கும். அவருடைய குரலையொத்த திரு. மது பாலகிருஷ்ணனின் குரலும் பிடிப்பதில் ஆச்சர்யமில்லை. இந்த பாடலை அவர் இழைந்து பாடியிருப்பது எப்பொழுது கேட்டாலும் ஒருவித பரவச நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்று தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக் கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

3 comments:

Unknown said...

தங்களின் இந்த கூற்றே முற்றிலும் ஆமோதிக்கிறேன். என்னை இதமாக்கிக் கொள்ள அவ்வப்போது இந்த பாடலையே நான் தற்போது கேட்டு வருகிறேன்.

Unknown said...

அட பாவி ஒரு வார்த்தை கூட இசை அமைப்பாளரை பற்றி இல்லை. இன வெறி??

Unknown said...

>>>
பாரதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே சிறப்புக் கவனத்துடன் இசையமைக்கப்பட்ட பாடல்களென கூறலாம். 
<<<

பாரதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் சிறப்புக் கவனத்துடன் இசையமைத்திருக்கிறார் இளையராஜா என்று சொல்லி இருக்கலாமே! நீங்கள் மகிழும் இந்த இசை வடிவத்தைத் தந்த அந்த இசைமாமேதையின் பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம்?