பக்திப் பாடல்கள் மக்களைக் கவர்ந்த அளவிற்கு வேறு எந்த பாடலும் கவரவில்லை என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை. நான் ரசித்த பக்திப் பாடல் வரிகளை இங்கே தரலாம் என்றிருக்கிறேன். சின்ன முயற்சி தான். இறைவன் ஆசியுடனும் உங்கள் ஆதரவுடனும் ஆரம்பிக்கிறேன். பிழையிருப்பின் உடன் திருத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதே சிறந்ததென்பதால்...."சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு" மூலம் ஆரம்பிக்கிறேன்.
பாடல் : சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஓரானைக் கன்றை, உமையாள் திருமகனை, போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும், வித்தை வரும் உத்திர சம்பட்டு வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்.
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
Monday, September 12, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கியிருக்கீங்க கணேஷ். இந்தப் பாடலை இதுவரை நான் கேட்டதில்லை கணேஷ்.
எனக்கு சீர்காழி பாடி பிடித்த பாடல் எது தெரியுமா?
ஆனை முகத்தான்
அரன் ஐந்து முகத்தான்
மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்.....
அந்தக் குரலும் இசையும்....அடடா! கேட்கத் திகட்டாத கானம்.
நன்றி ராகவன்.
சீக்கிரமே உங்க விருப்பப்பாடலைப் பதிவிடுகிறேன்
Post a Comment