Thursday, September 29, 2005

விநாயகனே வினை தீர்ப்பவனே

பாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

6 comments:

ஜென்ராம் said...

நீங்க இந்த ரூட்ல வேற கலக்கிட்டு இருக்கீங்களா? இப்போ தான் இந்த பதிவுக்கு வந்திருக்கிறேன்.

Ganesh Gopalasubramanian said...

நன்றி ராம்கி ஏதோ சீர்காழி சார் புண்ணியத்திலயும் டிஎம்எஸ் சார் புண்ணியத்திலயும் வண்டி ஓடிட்டு இருக்கு :-)

துளசி கோபால் said...

கணேசா,

எனக்கொரு பாட்டு போடுங்க.

'உனைப்படும் தமிழொன்று போதும்'

சீர்காழியா இல்லே டி.எம்.எஸ்சான்னு தெரியலை.

G.Ragavan said...

அருமை கணேஷ். சீர்காழியின் அருமைக் குரல் கணீரென்று கோயில் வெங்கல மணி போல ஒலிக்கும்.

ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் பாட்டும் அப்படியே போடுங்களேன்.

சிவா said...

கணேஷ். அருமையான பாடல். பக்தி பாடல்கள் என்றால் அது டி.எம்.எஸ் அல்லது சீர்காழி பாடல்கள் தான். மிக்க நன்றி. பிள்ளையார் அடிக்கடி கனவில் வந்து என்னடா ப்ளாக் ஆரம்பிச்சியே..என்னோட பாட்டு முதல் வணக்கமா போட்டியான்னு கேட்கறார். ஓரே ஒரு பாட்டு போடலாம்னு இருக்கிறேன். கண்டுக்கிடாதீங்க. ஒன்னே ஒன்னுதான் :-)

Unknown said...

nice song i want to listen that song