Tuesday, September 13, 2005

மாணிக்க வீணை ஏந்தும்

பாடல்: மாணிக்க வீணை ஏந்தும்
பாடியவர்: P.சுசிலா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

3 comments:

G.Ragavan said...

ஆகா! பாடகிகளில் எனக்குப் பிடித்தவர்களில் முதலிடம் பீ.சுசீலாவிற்குதான். வாணி ஜெயராம், ஈஸ்வரி, ஜானகி ஆகியோர் அடுத்து வருகிறார்கள்.

சுசீலாவின் குரலில் பக்திப் பாடல்களைக் கேட்பதென்றால் பேரின்பம். அதிலும் இந்தப் பாடலில் உள்ள குழைவும் இழைவும் மிகவும் அற்புதம்.

பாடல் வரிகளைத் தந்தமைக்கு மிகவும் நன்றி.

இந்தப் பாடல்களுக்கு இசை சோமு-காஜா என்று நினைக்கிறேன்.

முடிந்தால் "வைகறைப் பொழுதினில் விழித்தேன்" பாடல் வரிகளையும் கொடுங்கள்.

Ganesh Gopalasubramanian said...

நன்றி ராகவன்

//சுசீலாவின் குரலில் பக்திப் பாடல்களைக் கேட்பதென்றால் பேரின்பம். அதிலும் இந்தப் பாடலில் உள்ள குழைவும் இழைவும் மிகவும் அற்புதம்.//

சுசிலா அம்மாவின் குரலுக்கு இணை வேரில்லை என்றே சொல்லலாம்.
வைரமுத்து ஒரு முறை சொன்னார். "என்னைத் தூக்கிலிடுவதாய் இருந்தால்!! என் வாழ்வின் கடைசி ஆசை என்னவென்று கேட்டால் சுசிலா அவர்களின் பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்யுங்கள் என்று கேட்பேன்."

எவ்வளவு உண்மை. அந்த இழைவும் குழைவும் வேறு எவருக்கும் வாய்க்கவில்லை.

Sethu Subramanian said...

Who is the lyricist of this song? Please answer here.