Wednesday, September 21, 2005

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

பாடல் : செல்லாத்தா செல்ல மாரியாத்தா
பாடியவர்: L.R.ஈஸ்வரி
தொகுப்பு: தாயே கருமாரி

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா
நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
ஆதி சக்தி மாதா கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா

10 comments:

சிவா said...

Adada..enga ooru Maariyamman koyila niyabaga paduthiddiyale..Sari enna thideerentru pakthi :-)

சிவா said...

Appadiye antha paadalaiyum poodalame..kedda mathiriyum irukkum..paddu vennumba sollunga..I will help you.

தாணு said...

கணேஷ், பாட்டெல்லாம் ஞாபகத்தில் இருந்து பாடறதா இல்லை, காப்பியா?

துளசி கோபால் said...

அட! புதுப் பதிவா? பேஷ் பேஷ்.
சரியான இடத்துக்குத்தான் வந்துருக்கேன்:-)

'திருவிளக்கே'ன்னு ஒரு பாட்டு ஏதோ சினிமாவுலே வந்துச்சாமே.
எங்க தமிழ்ச் சங்கத்துலே கேட்டிருக்காங்க. தெரிஞ்சாச் சொல்லுங்களேன் ப்ளீஸ்

NambikkaiRAMA said...

அப்படியே எங்க ஊரு கோயில் கொடைவிழாவிற்கு வந்தது போல் பாடல் ஒலிக்கிறது

Ganesh Gopalasubramanian said...

நன்றி சிவா, தாணு, துளசி & ராமா

@சிவா
//Sari enna thideerentru pakthi :-)//
கொஞ்சம் பக்தியும் வேணுமில்ல... அப்புறம் பிள்ளையார் அடுத்த வருஷம் கொழுக்கட்டை தராம போயிடுவார்....

@தாணு
//கணேஷ், பாட்டெல்லாம் ஞாபகத்தில் இருந்து பாடறதா இல்லை, காப்பியா?//
காப்பி இல்லைங்க... தம்பி கர்நாடக சங்கீதம் படித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்காக பாடலைக் கேட்டு பாடல் வரிகளை அவ்வப்போது எழுதி வைத்துக்கொள்வதுண்டு. இப்பொழுது எல்லோருக்கும் உபயோகப்படட்டும் என்று பதிவாக்கியிருக்கிறேன்.

@துளசி
//'திருவிளக்கே'ன்னு ஒரு பாட்டு ஏதோ சினிமாவுலே வந்துச்சாமே.//
கிடைத்ததும் பதிவிடுகிறேன்.

@ராமா
//கொடைவிழாவிற்கு வந்தது போல் பாடல் ஒலிக்கிறது//
எனக்கும் தாங்க....

@சிவா
//Appadiye antha paadalaiyum poodalame//
சீக்கிரம் ஏற்பாடு செய்கிறேன்

பழூர் கார்த்தி said...

பதிவுகளில் ஓர் புதுமை,
பக்திப் பாடல்கள் அருமை,
தெரிவது நம் மண்ணின் பெருமை,
உம் நோக்கத்திலுள்ளது மேன்மை !!!

****

யோவ் கோவில்பட்டி கணேஷூ, சும்மா சொல்லக்கூடாதுய்யா, நீ 'புதுசு கண்ணா புதுசு' :-))

G.Ragavan said...

என்ன அருமையான பாட்டு.....

எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் உண்மையிலேயே ஒரு பரவசமான பாடல் இது. மாரியாத்தா கருமாரியாத்தா என்று அவர் பாடிக் கொண்டே இழுக்கும் போது மனது மயங்கி நம்மையும் இழுக்கிறது.

இந்த வரிகளைக் கொடுத்தமைக்கு நன்றி கணேஷ்.

Raghavan alias Saravanan M said...

கணேஷ்,
என்ன சொல்வதென்று தெரியவில்லை.நானும் இரண்டு வலைப்பூக்களைப் பாடல் வரிகளுக்காகவே உருவாக்கியிருக்கிறேன்..

திரைப்படப் பாடல் வரிகளுக்காக http://thiraippadap-paadal-varigal.blogspot.com

பக்திப் பாடல் வரிகளுக்காக http://bhakthip-paadal-varigal.blogspot.com/

என்ற இரு வலைப்பூக்களும்.

தற்பொழுது ஒரு சிந்தனை. நாம் கணிப்பொறி மொழியாம் C++ ல் உள்ள Reusability என்ற கொள்கையை ஏன் பின்பற்றக் கூடாது?

இருவரும் தத்தம் வலைப்பதிவுகளுக்கு மேற்கோள் காட்டுவதன் மூலம் ஒரே பாடலை இருவருமே தட்டச்சு செய்வதைத் தடுக்கலாமே? என்ன சொல்கிறீர்கள்?

நான் இன்னும் பக்திப் பாடல் வரிகளுக்குப் பிள்ளையார் சுழி போடவில்லை.

வாழ்த்துக்கள் பல தங்களது பயணம் செழிக்க.. ஆதரவுகள் தாராளம்.. பாராட்டுக்கள் ஏராளம்..

malar said...

ganesh, entha patta patikkurappa masugu romba santhosama irukku